Thursday, January 14, 2010

ஸலாஹுத்தீன் அவர்களே,

இவ்வளவு நீதியரசராக இருக்கும் தாங்கள், இத்தனை நாட்கள் நீண்ட உரக்கத்திலிருந்தீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது?

இவ்வளவு மடத்தனமான கோறிக்கையை வைக்கும் தாங்கள், நேரடியாகவே சென்று கேட்கலாமே? "இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்க்கும்" கதையாக அல்லவா உள்ளது தங்களின் பேச்சு.

சங்கைக்குரிய மவ்லானா அவர்களும் அவர்கள்தம் குடும்பத்தினரும் இன்றுவரை ஒவ்வொரு தொழில் செய்து உழைத்துதான் வருமானம் ஈட்டுகின்றனரே தவிர, தங்களைப் போல் குறுக்கு வழியில் அல்ல…

தங்களின் தந்தையாருடைய ரவ்ளாவைக் கூட காண முடியாத துரதிருஷ்டசாலியாக – அபாக்கியவதியாக தாங்கள் இருப்பதற்குக் காரணமே, தங்களின் பொய்யும் தவறான செயல்பாடுகளும், தங்களின் தந்தையின் மீது தாங்கள் வைத்திருந்த குறைவான மதிப்பும் மரியாதையும்தான் என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்… உங்கள் தந்தை வாழ்ந்த காலங்களில் எந்த ஒரு சிறிய உதவியைக்கூட செய்திடாத தங்கள் அவர் மறைந்த பிறகு அவர் பெயரை சொல்லிக்கொண்டு சொத்து சொத்து என்று அழையும் இந்த செயலுக்கு என்ன பெயர்?

தர்காவின் நிர்வாகத்தைக் குறை கூறும் தங்களுக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன்… கப்ரு ஜியாரத் மற்றும் கந்தூரி போன்றவை எப்படி நடைபெற வேண்டும் என்பதை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டுமானால், திருமுல்லைவாசலுக்கு வந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்… இந்த அளவிற்க்கு தர்கா நிர்வாகம் அழகாக செயல் படுவதற்க்கு முழு காரணம் சங்கைக்குரிய மவ்லானா அவர்களும் அவர்கள்தம் குடும்பத்தினரும் தான்.

தர்கா ஷரீஃபின் உள்ளேயே, சங்கைகுரிய யாஸீன் மவ்லானா (ரலி) அவர்களுக்கு அருகிலேயே, கலீஃபா ஷாஹுல் ஹமீத் அவர்களை அடக்கம் செய்து, இன்றளவும் ஜியாரத் செய்து வருவதிலிருந்தே, மவ்லானா அவர்களின் குடும்பத்தினர், எந்த அளவிற்கு, முரீதீன்கள் மற்றும் கலீஃபாக்களின் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பது புரியும்…

உங்களுக்கு கடைசியாக ஒரு எச்சரிக்கை - கேடுகெட்ட நபர்களின் தொடர்பிலுள்ள தங்களுக்கு சங்கைக்குரிய ஜமலியா யாசீன் மவ்லானா (ரலி) அவர்களின் ஜலாலியத்தை பற்றி மரியாதைக்குறிய உங்கள் தகப்பனார் கூறியிருப்பார்கள். அவர் கூறிய விஷங்களை மனதில் வைத்து கவனமாக இருக்கப்பாருங்கள். அல்லாஹ்வின் அவ்லியாக்களிடத்தில் வேண்டாம் உங்கள் விளையாட்டு. இனிமேலாவது நல்ல மனிதராக வாழ முயற்சியுங்கள்…

வஸ்ஸலாம்…

No comments: