Sunday, November 29, 2009

ஷஃபியுல்லாஹ்வின் புலம்பலுக்கு பதிலடி...

ஷஃபியுல்லாஹ் சொல்வதெல்லாம் பொய்யைத் தவிர பொய்!!!
வேறொன்றும் இல்லை!!

ஷஃபியுல்லாஹ் என்பவர் திண்டுக்கலை சேர்ந்தவர்.. காலமெல்லாம் வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தாய் வழி தந்தை வழி உற‌வினர்களின் ஆதரவில் B.Sc., வரை படித்தார். படித்து வேலை கிடைக்காமல் அலைந்த போது, உறவினர்களில் MDCC வங்கியில் பணிபுரிந்த அமானுல்லா என்பவரின் சிபாரிசில் ரேஷன் கடை ஒன்றில் சேர்த்து விடப்பட்டார். திண்டுக்கலுக்கு அருகே உள்ள சீலப்பாடி என்ற ஊரில் ரேஷன் கடையில் வேலை பார்த்த போது, பொது மக்க‌ளுக்கு சேர வேண்டிய அரிசி, மண்ணெண்ணெய், சீனி போன்றவற்றை கொள்ளையடித்தார். பல தடவை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டதும் உண்டு. இன்றும் இவர் மீது வ்ழக்கு உண்டு. இப்படி இருக்கும் காலத்தில் சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் திண்டுக்கல் பேகம்பூருக்கு விஜயம் செய்தார்கள். அவர்களிடம் புலவர் குடும்பப் பெரியவர்கள் எம் உறவினர்கள் எல்லோரும் வறுமையில் வாடுகிறார்கள். எனவே, தாங்கள் எங்கள் புலவர்கள் வசிக்கும் பூர்வீக பழைய வீட்டுக்கு வர வேண்டும், நபி பேரராகிய தங்களின் திருப்பாதம் பட்டால், வறுமை விலகும். அது மட்டுமல்ல, ஜவ்வாதுப் புலவரின் பேச்சை மீறியதால், அவர்க்ளின் சாபமும் எங்கள் குடும்பத்தார் மீது உள்ளதாக பெரியவர்கள் கூற கேட்டிருக்கிறோம். எனவே, சாபத்தை மாற்றும் வல்லமை வலிமார்களின் துஆவுக்கே உண்டு, எனவே, வந்து துஆச் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அது போல, வாப்பா நாயகம் அவர்கள் அந்த வீட்டிற்கு வருகை தந்தார்கள். அங்கு தான் சஃபியுல்லாவின் வீடும் (ஒரு ரூம்) இருந்தது.

பார்த்து மிகவும் கவலைப்பட்டு, இரக்கம் கொண்டு எல்லோரது நல்வாழ்வுக்கும் துஆச் செய்தார்கள். அதற்குப் பின் மிகப்பெரும் மாற்றம் அந்த குடும்பத்தில் ஏற்பட்டது. எல்லோரும் வியாபாரிகளாக மாறி சென்னை பெரியமேட்டில் பெரிய வியாபாரிகளே அஞ்சும் அளவுக்கு முன்னேறினார்கள். பேகம்பூர் மக்கள், வாப்பா நாயகம் துஆச் செய்த காரணத்தால், இப்படி பரக்கத்தாக மாறிவிட்டார்களே என்று பேசிக்கொள்வார்கள்.இது இப்படியிருக்க, சஃபியுல்லாஹ் இருவருடன் சேர்ந்து வியாபாரம் தொடங்கினார். தொடங்கி வளரும்போதே ஒரு பார்ட்னரை வெட்டி விட்டார். சென்னை சென்று M.Y. நிஜாமுத்தீன் அவர்கள் மண்டியில், அவர்களது தனி ஆதரவுடன் வைத்து வியாபாரம் பழக்கப்பட்டார். பின்னர் அவருக்கே துரோகம் செய்து, M.A. காதிர் அன் கோ என்ற பெயரில் M.Y. நிஜாமுத்தீன் அவர்களின் பார்ட்டிகளையெல்லாம் இழுத்துக் கொண்டு போய், அவரது வியாபாரத்தை வீழ்த்தினார். இவரது மண்டியை நம்பி தோல் அனுப்பிய உறவினர்கள் மற்றும் பேகம்பூர் வியாபாரிகளைக் கணக்கில் மோசடி செய்து அவர்களின் கமிஷன் பனத்தில் தான் மட்டும் வளர்ந்தார். M.A. காதிர் அன் கோ - வை யாரும் அசைக்க முடியாது என்று மார்தட்டி சொன்னவர், பார்ட்னர்களிடம் நீதியாக நடக்காததால், சில வருடங்களிலேயே அது சிதைந்து போனது. துண்டுத் தோலை விற்று ஏழைக் குமர்களுக்கு உதவி செய்வதாக கூறி கொஞ்சம் கொடுத்து விட்டு, தானே அதைச் சுருட்டிக் கொண்டார். பணம் ஏற,ஏற மண்டிக்கு வரும் வியாபாரிகளிடம் கால்மேல் கால்போட்டு ஆணவமாக அவமரியாதையாகப் பேசுவதால், வரவர வியாபாரிகள் குறைந்து கொண்டே போனார்கள்.
இவரது அண்ணனுக்கு வேலைக்கு கொடுத்து இவரது குடும்பத்தைக் காப்பாற்றி, முதுகெலும்பாக இருந்து பல உதவிகள் செய்த Dr. சாதிக் என்பவரிடம் நான் ஒரு மணிநேரத்திற்கு பல ஆயிரம் சம்பாதிக்கிறேன், நீங்கள் டாக்டர் தொழிலில் என்ன சம்பாதிக்கப் போகிறீர்கள்? என்று பேசி, அவர் மனதில் ஆறாத வடு ஏற்படுத்தினார். ஊராருக்கு உபதேசம் செய்யும் இவர் தனது அண்ணன் சஹாபுத்தீனை டிரைவராக வைத்து மரியாதையின்றி நடத்தினார்.
இவர் பெரியமேட்டில் சொத்து வாங்கியதுகூட மாமனார் குடும்ப வாரிசுகளுக்கு துரோகம் செய்து தான். இவரது மாமனார் பல ஆண்டுகள் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். சென்னையில் பல ஆண்டுகள் வாடகைக்கு குடியிருப்பவர்கள் அந்த வீட்டையே வீட்டுக்காரர்களிடமிருந்து நிர்ப்பந்தித்து வாங்கிக் கொள்வது சகஜம். அதேபோல், இவரது மாமனார் வீட்டை வீட்டுக்காரர்களிடமிருந்து சொற்ப விலைக்கு வாங்கினார். நியாயமாக, அந்தச் சொத்து இவரது மைத்துனர்களுக்குத் தான் சேர‌ உரிமையுள்ளது.. ஆனால், அவர்கள் வாயில்லாப் பூச்சிகளாக இருந்தால் அவர்களை ஏமாற்றி அல்வா கொடுத்தார். இன்று அந்த சொத்தும் இவரது கையை விட்டுப் போய் விட்டது. அநியாயமாக அடுத்தவன் வயிறெறிய வாங்கியது வந்த வழியே போவது சரிதானே?
இது இப்படியிருக்க, ஏழையாக இருந்தபோது, அடையாறில் நடந்த மாதகூட்டத்துக்கெல்லம் சென்று வந்தவர் பெரியமேட்டில் நடந்து வந்த ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மாத கூட்டத்தில் சரிவரக் கலந்துகொள்வதில்லை. ராத்திபுக்கும் சரியாக வருவதில்லை. சபை சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதில்லை. அப்படியிருந்தும், சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் கருனை மனதோடு மன்னித்தே வந்தார்கள். இது இப்படியிருக்க, கேபிடல் பார்ட்னராகிய சிறிய தந்தையின் மகன் ஃபாரூக் என்பவருக்கு ரூ. 4 லட்சம் தர வேண்டியிருந்தது.. அவரோ நோயாளியாயிருந்தார். இவரை நம்பி எல்லா முதலையும் இழந்திருந்தார்.
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள், பாதிக்கப்பட்ட பார்ட்னருக்கு பணத்தைக் கொடுப்பது தானே நியாயம்? மொத்தமாகக் கொடுக்க முடியாவிட்டால் பத்தாயிரம், இருபதாயிரம் எனச் சிறிது சிறிதாகவாவது கொடுத்து விடுங்கள் என்று அறிவுரை கூறியதைப் பொறுக்க முடியாமல் , மரியாதையின்றி எழுந்து சென்றார். கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுக்க மனமில்லாதவர் வாப்பா நாயகம் அவர்களின் வீட்டுத் திருமணத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்ததாகச் சொல்வதை உலகம் ஏற்குமா? M.Y. நிஜாமுத்தீன் அவர்களுடன் சேர்ந்து பணம் கொடுத்ததாக கூறும் சஃபியுல்லா 1972ல் எந்த வருமானமும் இன்றி உறவினர்களின் ஆதரவில் படித்துக் கொண்டிருந்தார்.
ஒரு வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றால், அந்த நிறுவனத்துக்கு நல்ல பெயர் கேட்பது, அதன் வளர்ச்சிக்கு துஆச் செய்ய சொல்வது, மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டுமென்றால் ஆலோசனை கேட்பது, வியாபாரத்தில் சிக்கல் வந்தால் அது நீங்க வேண்டுமென்று நிய்யத்து, நேர்ச்சை செய்வது இப்படியெல்லாம் கோரிக்கை வைது பலனைப் பெற்றவர் சேர வேண்டியவருக்கு பனத்தைத் திருப்பி கொடுக்கச் சொன்னால் மட்டும் அது கசந்தது. தனக்கு சாதகமென்றால் இனிக்கும், தனக்கு பாதகமென்றால் கசக்கும், இது தான் இவரின் இரண்டும் கெட்டான் நிலை.
உறவினர்களை வாப்பா நாயகம் அவர்கள் என்றும் பிரித்ததில்லை. அதற்குச் சாட்சி, இவரது தாயார்தான். இவரது தாயார் முரீதாக இருந்தும் இவரிடம் பேசவோ, போகவோ தடை விதித்ததாக இவரால் நிரூபிக்க முடியுமா? மச்சான், தங்கை உறவுகளும் அப்படித்தான். ஆனால், இவரது நடவடிக்கை பிடிக்காமல் போனதால் அவர்களாக இவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். கலீஃபா கரீம் அண்ணன் அவர்கள், இடையே சில காலம் சபையில் இருந்து பிரிந்திருந்தபோது அவர் தமது பெண்பிள்ளைகளை ‍ மகன்கள், ம‌ருமகன் யாரிடமும் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்படவில்லை. இன்னும் இதுபோன்று பல உதாரணங்கள் சொல்லலாம்.
மேலும், சபை சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாதவர்கள் சபையிலிருந்து நீக்கப்பட்டபோது, அவரவர் தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், சஃபியுல்லாவோ சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் பற்றி கண்ட கண்ட இடங்களில் கமெண்ட் அடித்துக் கேவலம் செய்தார். தங்களின் குருவை இழிவாகப் பேசியவரை முரீதுகளான அவரின் உறவினர்களே உதைத்து நொறுக்கியிருப்பார்கள். ஆனால், ஷைகு நாயகம் அவர்களிடம் கற்றுக் கொண்ட நல்லுபதேசத்தால் பொறுமையாக இருந்தார்கள். இப்படிப்பட்ட குருதுரோகியிடம் தொடர்பு வைத்தால், அந்த முஸீபத்து நம்மையும் பிடித்துக் கொள்ளுமே என்று உறவினர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். உறவினர்களில் பெரும்பாலானோர் முரீதுகளாக இருந்ததால், அவர்கள் உறவுகளைத் துண்டித்துக் கொண்டதால், யாருமற்ற அனாதையாக விடப்பட்டார். அந்த வருத்தம் தான் அவரை இந்த அளவிற்குப் புலம்ப வைத்திருக்கிறது. என்ன செய்வது? வினை விதைத்தவன், வினை அறுக்க வேண்டியது தானே?
ஆயிர‌க்க‌ண‌க்கான‌ முரீதுக‌ள் வாப்பா நாய‌கம் அவ‌ர்க‌ளுக்கு இருந்த‌போதும், த‌குந்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ச‌பையிலிருந்து நீக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை விர‌ல் விட்டு எண்ணி விட‌லாம். நீக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு சில‌ரைத் த‌விர‌ அத்த‌னை முரீதுக‌ளும் நேர்மையான‌வ‌ர்க‌ளாக‌, ந‌ல்ல‌டியார்க‌ளாக‌த் திக‌ழ்கிறார்க‌ள். வாப்பா நாய‌க‌ம் அவ‌ர்க‌ளின் துஆவால் ப‌ல‌ன் பெற்ற‌வ‌ர்கள் ஏராளம், ஏராள‌ம். தீராத‌ வியாதிக‌ள் தீர்க்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ஏழையாயிருந்து ச‌ஃபியுல்லாவை போல் ப‌ண‌க்கார‌னான‌வ‌ர்க‌ள், கும‌ர்க‌ளைக் க‌ரையேற்றிய‌வ‌ர்க‌ள், ஆயுள் நீடிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இப்ப‌டி அநேக‌ருண்டு. ச‌ஃபியுல்லா பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளென சில‌ரைப் ப‌ற்றிக் குறிப்பிடுகிறார்.. ஆனால், ப‌ல‌ன் பெற்ற‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லை எடுத்தால், ப‌ல‌ மைல் நீள‌மாகும். அதுச‌ரி, இவ‌ர‌து மைத்துன‌ர் மோச‌மான‌ வியாதியால் பீடிக்க‌ப்ப‌ட்டு இற‌ந்தாரே?!(அல்லாஹ் அவ‌ருக்கு பிழை பொறுப்பானாக) அது இவ‌ருடைய‌ மைத்துன‌ர் என்ப‌தாலா? இன்னும் இது போன்ற‌ ப‌ட்டிய‌லை நாம் கூற‌ முடியும்.
வாப்பா நாயகம் அவர்களுடன் இருப்பதால், சோதிக்கப்பட்டார்கள் என்ற வாதம் சொத்தை வாதமாகும். ரசூல் (ஸல்) அவர்களைச் சார்ந்திருந்த சஹாபாக்கள் எத்தனை பேர் ஷஹீதானார்கள்? கை போன, கால் போன நபித் தோழர்கள் எத்தனை பேர்? ஏன் அவர்களின் ஆண் மகவு குழந்தையாக இருந்தபோதே வஃபாத் ஆனது. அவர்களின் மகளார் ஜைனப் (ரலி) அவர்களின் கரு எதிரிகளால் சிதைக்கப்பட்டது.. ஏன் கர்பலா களத்தில் அவர்களின் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீது ஆனார்கள். இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் விஷம் வைத்ததால் ஷஹீதானார்கள். இன்னும் இதுபோன்றவை நிறைய உள்ளன.
இன்னுமொரு முக்கியமான விஷயம்...
அஹ்லபைத்துகள் எனும் சையிதுமார்கள் சதகா ‍ ஜகாத் பொருள் அவர்களுக்கு ஆகாது. அல்லாஹ் குர்ஆனில் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றால், காணிக்கையுடன் செல்லுங்கள் என்ற கட்டளைப்படி அவர்களின் வாரிசுகளைச் சந்திக்கச் செல்லும்போது, வெறுங்கையோடு செல்லாமல், காணிக்கையுடன் செல்வது அல்லாஹ்வும் ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த நடைமுறை. இது இவர்களிடம் மட்டுமல்ல. புகழ்பெற்ற வலிமார்களின் வாழ்க்கையிலும் உண்டு. அஜ்மீர் நாயகம் (ரலி)அவர்களிடம் ஏராளமான செல்வம் வந்து குவியும். வலிமார்களைச் சந்திக்கச் செல்பவர்கள் அவர்களை வஸீலாவாக வைத்து அவர்களிடம் நேர்ச்சை வைத்து உலகில் யாரிடமும் பெற முடியாத தெய்வீக உதவிகளை அடைந்தபின் அந்த நேர்ச்சைப் பொருட்களை வலிமார்களிடம் ஒப்படைப்பது கண்கூடு. அவர்கள் தம் துஆவின் மூலம் கோடிகோடியாக‌ப் பெற்றவர்கள் சில ஆயிரங்களை வழங்கிவிட்டு, செய்ததைச் சொல்லிக் காட்டுவது நன்றி கொன்ற செயலல்லவா?
வாப்பா நாயகம் அவர்களின் ஏழ்மையைப் பற்றிப் பேசுகிறார். அப்போது இந்த ஆள் எப்படி இருந்தார் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும். ஏழ்மை எனது பெருமை என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க, ஏழ்மையைக் கேவலம் பேசுகிறவன் யாரைப் பேசுகிறான் எனச் சிந்திக்க வேண்டும்! கலீஃபா A.P.S. அவர்களை நரகவாதி எனக் கூறியதாக உளறுகிறார். அப்படிக் கூறியிருந்தால், திருமுல்லைவாசலில் தங்கள் தந்தையாருக்கு அருகே அடக்கம் செய்ய சம்மதித்திருப்பார்களா?
க‌லீஃபா. க‌ரீம் அண்ண‌ன் அவ‌ர்க‌ள் பிரிந்திருந்த‌ போது, இவ‌ர் போல‌ ந‌ட‌க்க‌வில்லை. த‌னது குடும்ப‌த்தாரை வாப்பா நாய‌க‌ம் அவ‌ர்க‌ளின் தொட‌ர்பிலேயே இருக்க‌ச் செய்தார். யாருக்கும் இதுபோல‌ க‌டித‌ம் எழுத‌வில்லை. குருவின் மீது அன்பு கொண்டு அமைதியாக‌ இருந்து மீண்டும் அடைக்க‌ல‌மானார். அட்வ‌கேட். பீர் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் த‌ம‌து மாம‌னார் விஷ‌ய‌த்தில் வ‌ருத்த‌ப்ப‌ட்ட‌தில்லை. ச‌ஃபியுல்லா விஷ‌ய‌த்தில் வேண்டுமானால், இப்ப‌டி ஒரு ஆள் ந‌ஸீபு கெட்டுப் போய் விட்டாரே என‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டிருப்பார். வாப்பா நாய‌க‌ம் அவ‌ர்க‌ளால் திருத்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் - அநேக‌ர். த‌வ‌றுக‌ளைச் சுட்டிக்காட்டிய‌தற்காக‌ ஓடிப்போன‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர். ஒரு குரு த‌ன் இஷ்ட‌த்திற்கு ந‌ட‌க்க‌ வேண்டுமென‌ நினைப்ப‌வ‌ன் ந‌ல்ல‌ முரீது அல்ல‌. குருவின் எண்ண‌த்திற்கு இசைய‌ ந‌ட‌ப்ப‌வ‌னே உண்மை முரீது.
ச‌ஃபியுல்லா எப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆள் என்ப‌த‌ற்கு அவ‌ர‌து இந்த‌க் க‌டித‌மே சாட்சி. இல்லாத‌தையும், பொல்லாததையும் இட்டுக் க‌ட்டிப் பேசும் ஒரு துரோகி மீது ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌து ச‌ரிதான் என்ப‌த‌ற்கு அவ‌ரும் அவ‌ர‌து க‌டித‌முமே சாட்சி.

- ஷேக், பேகம்பூர், திண்டுக்க‌ல்.

No comments: