நூலறுந்த பட்டங்களே
நுங்கில் லாத மட்டைகளே
காலூன்றிய காலங்களைக்
கணப்பொழுதில் மறந்துவிட்ட
வாலறுந்த வானரமே
வழிகெட்ட மண்டுகளே
மேலெழுந்த குப்பையெல்லாம்
மேகமென ஆகாது.
கண்மணி யாம்எம் நாயகத்தை
கடியும் கொடுங் கச்சைகளே
மின்மினிப் பூச்சி வெளிச்சத்தில்
மீசை முறுக்கும் பிச்சைகளே
பண்ணும் பாபத்திற்கு ‘உன்சபை”
பதில்சொல்லும் காலம்வரும்
கண்ணும் கருத்தும் மழுங்கி
காலனின் பிடியில் சாவாய்.
‘பாலெ”ன நம்பியொரு கூட்டம்
பாழுங் கிணற்றில் இறங்கியதே.
தம்பியின் நிழலில் பிழைக்கும்
தறுதலையே அதன் தளபதியாம்.
ஈமானே இல்லாத சீமான்’பெக்கர்”
இந்தக்குழுவின் துணைத்தலையாம்
பேசவே தெரியாத சாத்தான் காட்டர்
பாபக்குழுவின் செயலாளராம்
கொடுங் கொள்கைக் கூட்டத்துக்கு
தற்குறி ‘சாடிக்”கே கொ.ப.செ.வாம்
அண்டிப் பிழைக்கும் பென்தியாஸ்
அடிவருடிக் கூட்டத்தின் அ.செ.வாம்
பெண்டிர் மோகத்தில் மானமிழந்த
‘பெருத்த” சாணச் செல்வரோடு
வண்டி வண்டியாய் பொய்யெழுதும்
சப்பியுல்லாவும் அதன் ஜால்ராவாம்
எல்லாரையும் தூண்டிவிட்டு
புன்னகைக்கும் ‘புகழ்விரும்பி”
எத்தனை நாள் கைகொடுக்கும்?
புகழும் பணமே உனைக்கெடுக்கும்.
எச்சரித்தாலுமே திருந்தாமல்
இதையும் சாபம் என்கிறாய்
எச்சமிருக்கும் காலத்தில் உன்
எச்சங்களைத் திருந்தச்சொல்.
பொய்யெழுதும் போக்கிரியே
போதும் போதும் நிறுத்திக்கொள்.
‘மெய்” கொடுக்கும் வேதனையை
உன் சந்ததிக்கும் சேர்க்காதே
கை நீட்டும் உன் வீராப்பே
உனக்கு வைக்கும் பெரும்ஆப்பு.
கைசேதம் ஆகும் நாளில்
கவலைப்பட்டும் பலனில்லை.
நூலறுந்த பட்டங்களே
Saturday, January 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment