Sunday, December 20, 2009

ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்பொழுது.......

டாக்டர். அஷ்ரஃப் அலி ஹக்கிய்யுல் காதிரி
MD DM (Cardiology)
முஹம்மது ஸ‌கரிய்யா ஹக்கிய்யுல் காதிரி
Marine Electronic Engineer


வலீமார்களும், குத்புமார்களும் ஹக்கால் ஹக்குடைய கித்மத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள்.
அவர்களுடைய ஆன்மீக ஆட்சி மறைவுலகத்தைச் சேர்ந்தது. அவர்களை மனிதர்களால் அறியவும் முடியாது. உருவமற்ற இறைவனுக்குக் காலும், கையும், ஏழு வானங்களுக்கு அப்பால் அவன் அமர சிம்மாசனம் என்ற கட்டுமானமும் (அதில் அல்லாஹ் அமரும்பொழுது அல்லாஹ்வுடைய பாரத்தால் குதிரைமீது இடப்பட்ட புதிய சேணம், அதன்மீது குதிரை வீரன் அமரும்பொழுது கிறீச்சிடுவதுபோல் அர்ஷ் கிறீச்சிடுமாம். நஊது பில்லாஹ்) கற்பிக்கும் தைமிய்யாக்களின் கற்பனைக்கு வலீமார்களும் குத்புமார்களும் அப்பாற்பட்டவர்கள்.

ஆன்மீக அரசர்களின் வாழ்க்கையும், நடையுடைகளும், சொல்லும், செயலும், நடவடிக்கைகளும் இந்த தைமிய்யாக்க‌ளின் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பகற் கன‌வுகளுக்கு அப்பாற்பட்டது. தங்களைப்போல் வலீமார்களும் குத்புமார்களும் உடையணிவதாலும், உணவருந்துவதாலும், மனித உருவத்தில் இருப்பதாலும் இவ்வறிவிலிகளால், இவர்களும் நம்மைப்போல் மலத்தை வயிற்றில் சுமந்த மனிதர்கள் என்பதற்குமேல் எண்ணமுடியாது.

இவ்வாறாக ஹக்கு வலீமார்களையும் குத்புமார்களையும் மனிதர்களிடமிருந்து திரையிட்டு மறைத்துள்ளது. ஆனால், அல்லாஹ்வின் ஆதி கற்பனையில் எவரெவ‌ர்களுடைய விதியில் அபூர்வமாகப் புதையல் கிடைத்ததுபோல மகத்தான நன்மையை அல்லாஹ் நாடிவிட்டானோ அவர்களுக்கு, தங்கள் காலத்துக்குரிய நாயகர்களை அறிந்துகொள்ளும் பெரும்பாக்கியத்தை நல்குகிறான். அல்லாஹு அக்பர்.

அப்படிப்பட்ட பாக்கியத்திற்கு உரியவர்தான் மறைந்த எங்களது தகப்பனார் கலீபா, அல்ஹாஜ், அப்துல் கரீம் (ஜமாலி) அவர்கள். எங்களது தகப்பனார், சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் குத்பியத்தை உணர்ந்த முதல் மனிதர். இது அவர்களுடைய திறமையினால் அல்ல. இது ஹக்கு அவர்களுக்குக் கொடுத்த பெரும்பாக்கியம்.

எங்களது குடும்பத்தின் சுய நலன் கருதியே எங்க‌ளது தகப்பனார், சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களை வருடாவருடம் இந்தியா வந்து எங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அந்த உருக்கமான கடிதத்தை கலீபாவின் மூத்த மகனாகிய, அஷ்ரப் அலியாகிய நான்தான் என் கைப்பட எழுதியவன். இக்கோரிக்கை வாப்பா நாயகம் அவர்களுக்கு மிகமிகக் கடினமாகவே இருந்தது. எனினும், எங்கள் தகப்பனாரின் விடாப்பிடியால்தான் வாப்பா நாயகம் அவர்கள் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டனர். அவ்வாறு ஒப்புக்கொண்டாலும் இந்திய விஜயத்தை நிறைவேற்றுவது ஆரம்பத்தில் வாப்பா நாயகம் அவர்களுக்கு மிகவும் கடினமாகவேயிருந்தது.

சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் அனைத்துப் பட்டோலைகளும் எங்களது தகப்பனாரால் பாதுகாக்கப்பட்டு பொக்கிஷம்போல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவைகள்தான் எங்கள் சொல்லுக்கு ஆதாரங்கள். வாப்பா நாயகம் அவர்களின் அகமியத்தை முதலில் எங்கள் நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய ஆன்மீக நண்பர்கள் இவர்களுக்கு மட்டும்தான் எங்கள் தகப்பனார் வெளியாக்கியிருந்தனர். பின்னர் அனேகர் வந்தனர். அவர்களில் ஆன்மீக தாகிகளும் இருந்தனர். அப்துல் கரீம் ஓதியவர், படித்தவர், இறை நேசர்களை அறிந்தவர் அவர் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று ஈமான் கொண்டவர்களும் இருந்தனர்.

ஆன்மீக வழியே இன்னதென அறியாது இருந்துவிட்டு இறைவனின் கிருபாகடாட்சம் கொண்டு கற்பூரத்தில் நெருப்புப் பற்றிக் கொள்வதுபோல ஈமான் பெற்றவர்களும் இருந்தனர். வரிக்கு வரி புத்தகங்களை வாசித்து ஆராய்ச்சி செய்து ஒரு வழியாக ஒப்புக்கொண்டு வந்தவர்களும் இருந்தனர். வலீமார்கள் குத்புமார்களென்றால் என்னவோ ஏதோவென்று நினைத்துக்கொண்டு வந்து ஏமாந்து போனவர்களுமுண்டு.

மந்திரத்தால் மாங்காய் விழுமென்று மெஸ்மெரிச வித்தைகளை எதிர்பார்த்து வந்து ஏமாந்தவர்களும் உண்டு. நிமிஷத்திற்கு ஒரு அற்புதம் நடக்குமென்று நினைத்து வந்து ஏமாந்தவர்களும் உண்டு. பீடி மஸ்தான், முட்டை மஸ்தான் மஜ்தூபுகள் போன்று கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று வந்து ஏமாந்தவர்களும் உண்டு. கறுப்பு உடையணிந்து சடை வளர்த்து கண்களை உருட்டுவதையும் விளங்காத பாஷையில் சம்பாஷணை செய்வதையும் காண வந்து ஏமாந்தவர்களும் உண்டு. முழ நீள தலையணியும் கணுக்கால்வரை அங்கியும் வாய் ஓயாத ஸ்தோத்திரங்களையும் பார்க்க வந்தவர்களும் உண்டு. வாய் பேசாது மணிக்கணக்காக கண்மூடிய தியான நிலையை நினத்து வந்தவர்களும் உண்டு. இம்மென்றால் இருநூறும் அம்மென்றால் ஆயிரமுமாக குர்ஆன் ஆயத்துகளும் ஹதீஸ்களும் சண்டமாருதமாக அள்ளி வீசப்படுவதை எதிர்பார்த்து வந்தவர்களும் உண்டு.

குதர்க்க நோக்கோடும், காழ்ப்புணர்வோடும், விஷம புத்தியோடும்,பொறாமைக் கண்கொண்டு நோக்கி, உண்மைக்கு மாறாகப் பொய்ப் பிரச்சாரம் செய்யும் எண்ணத்தோடு வந்த குழப்பவாதிகளும் உண்டு. நன்னம்பிக்கையும், நாணயமும், சித்த சுத்தியும், உள்ளன்பும், உவப்பும், நெருக்கமும் கொண்ட முரீதுகளும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். இவர்கள் தங்களது இகபர பொறுப்புக்களை தங்களது முர்ஷிதிடம் ஒப்படைத்தவர்கள். இம்முரீதுகளின் நலன் நாடி இம்முரீதுகளின் உள்ளங்களை சுத்தம் செய்வது முர்ஷிதின் கடமையாகிறது.

அறுவை சிகிச்சைக்கு அனுமதி கொடுத்துவிட்டு மருத்துவரின் கத்தியை வெறுத்தால் நோய் தீருமா? புடம் போடாமல்தான் தங்க‌த்திலுள்ள அழுக்கை நீக்க முடியுமா? கசப்பு மருந்து கொடுக்கப்படும்பொழுது முரீதுகள் மூன்று வகையாகப் பிரிவர். முதல் வகையினர் தங்க‌ளது ஆன்மீக நன்மை கருதி சிகிச்சையைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வர். இரண்டாவது பிரிவினர் வாய் பேசாது விலகிவிடுவர். மூன்றாவது வகையைச் சேர்ந்த அபாக்கியவான்களோ தங்க‌ளது முர்ஷிதுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவிடுவர். இம்மையிலும் மறுமையிலும் இவர்களைவிட நஷ்டமடைந்தவர்கள் யார்? பாவமென்னும் நரகலை எப்பொழுதும் தனது ஆன்மாவில் பூசிக்கொண்டிருப்பவன் சுத்தத்தையறியான். குர்பத்தென்னும் சுத்த நீரால் குளித்துவிட்டு மறுபடியும் நரகலை தம் ஆன்மாவில் பூசிக்கொள்ளுபவர்களைவிடப் பேறு கெட்டவர்கள் யார்?

எங்கள் தகப்பனாருடைய உயிர் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் திவ்ய சலாத்திற்கு பதில் சலாம் சொல்லிக்கொண்டே பிரிந்தது. இடையில் வாப்பா நாயகத்திற்கும் எங்கள் தகப்பனாருக்கும் உள்ள விஷயங்களில் தலையிடும் உரிமை, பெற்ற பிள்ளைகளாகிய எங்களுக்கே இருந்ததில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் ஞான பாட்டையில் அடியெடுத்து வைக்காத அபக்குவிகளுக்குப் புரியாது. எந்தக் கட்டத்திலும், சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களைக் கொண்டு அனுதினமும் வசீலா தேடும் நியமத்தை ஒரு பொழுதும் எங்கள் தகப்பனார் கைவிட்டதில்லை. இவையெல்லாம் ஒரு முர்ஷிதிடம் ஒரு முரீது எந்த நிலைமையிலும் எவ்வாறு மனம் பிறழாது நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரண‌ங்கள்.

வலீமார்களையும் குத்புமார்களையும் அல்லாஹ்தான் தனது ரஹ்மத்துடைய மடியில் வளர்க்கிறான். ஞான உணவு அளிக்கிறான். மனிதர்கள் வளர்த்துவிடுவதற்கு ஞான மகான்கள் அரசியல்வாதிகளல்லர். இறைவனின் சொந்தக் கொடைகளுக்குமுன் இவ்வுலக ஐஸ்வரியங்கள் நஜீஸைவிடக் கேவலம். ஆனாலும், தங்களை அண்டியவர்கள்மீது உள்ள இரக்கம் காரண‌மாகவே ஞான மகான்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கின்றனர். இவையெல்லாம் அறியாதவர்களுக்குப் புரியாது.

சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின்மீது அபாண்டமாகவும், அவதூறாகவும் கைகூசாமலும், நாகூசாமலும் எழுதுபவர்களுக்கும், பேசுபவர்களுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது இதுதான். இவ்வுலகம் வெறும் இரண்டு நாள். இவ்விரண்டு நாட்களையும் உங்கள் ஆன்மாக்களை அபாயத்தில் ஆக்கிக்கொள்வதில் நீங்கள் ஆனந்தம் கொள்பவர்களாக இருந்தால் நாங்கள் உங்க‌ளைத் தடுக்கப்போவதில்லை. இறைவனை அஞ்சுபவர்களுக்கு ஹதீஸ் குத்ஸியில் இறைவன் செய்துள்ள கீழ்க்கண்ட பிரகடனம் போதும்:

إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب

(நிச்சயமாக அல்லாஹ் சொல்கிறான்: என்னுடைய நேசர்களைப் பகைத்தவர்கள்மீது நிச்சயமாக நான் யுத்தப் பிரகடன‌ம் செய்துவிட்டேன்).
சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் மறைந்த உயிர்ப் பிள்ளை M.Y. நிஜாமுத்தீன் அண்ணன் அவர்கள் கூறுவார்கள்:
"ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்பொழுது எச்சில் இலை என்னவாகும்?"
ஈமான் ஆட்டங்காணும்பொழுது இதுதான் நடக்கும்.
ஏக இறைவன் நம்மனைவர்களையும் ஈமான் ஆட்டங்காணும் துர்ப்பாக்கியத்திலிருந்து காப்பாற்றுவானாக. ஆமீன்.

ஷபியுல்லாவுக்குச் சாட்டையடி...

ஷபியுல்லாவின் பதில் கடிதம் கண்டேன். பரிதாபமாக இருந்தது. சங்கைமிகு வாப்பா நாயகம்
அவர்களை அல்லாஹ் எனக் கூற மறுத்ததால்தான் சபையிலிருந்து நீக்கப்பட்டதாகக்
கூறுகிறார். இது அப்பட்டமான பொய்ச் செய்தியாகும். சபையிலிருந்து அவர் ஏன் நீக்கப்பட்டார்
என்னும் உண்மைச் செய்தியை இதுவரை நாங்கள் வெளியிடவில்லை. அவ்வுண்மையை சபி பாய் வெளியிட விரும்பினால் நாங்கள் வெளியிடத் தயாராக உள்ளோம். ஆனால், மரணப் படுக்கையில் இருக்கும் சபிபாய் இதயம் வெடித்துவிடும் என்னும் கருணையினால் தான் அமைதி காத்து வருகிறேன்.

Ö மேலும், சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களை நாங்கள் யாரும் அல்லாஹ்
எனக்கூறவில்லை. சபி பாய் தான் அவ்வாறு கூறி ஷிர்க்கில் இருக்கிறார் எனக் கருதுகிறோம்.

Ö சபையில் பல வருடங்கள் தான் இருந்ததாகக் கூறுகிறாரே, அந்தக் காலகட்டத்தில்
சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களை அல்லாஹ் என்றுதான் கூறினாரா? எனத் தெளிவுபடுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.

Ö திண்டுக்கல் ஜபருல்லா அண்ணனிடம் பேசமுடியவில்லை எனப் பொய்யாக
ஆதங்கப்படுகிறாரே, திண்டுக்கல் ஜபருல்லா அண்ணனுக்கு இவர் செய்த அநியாயம் - துரோகத்தை ஆதாரத்துடன் வெளியிட உள்ளோம். சபி பாய் அவற்றை எதிர்கொள்ளத் தயாரா?

Ö கலீபா. அட்வகேட். பீர் முஹம்மது அவர்கள், சபி பாயிடம் வருத்தப்பட்டதாகக் கூறுகிறார்.
அட்வகேட் அவர்களிடம் இதுவிஷயமாக உண்மை நிலவரத்தைக் கேட்டறிந்து விரைவில்
வெளியிடுவோம்.

Ö குரு என்பது யாரோ ஒருவரால் கொடுக்கப்படும் பட்டம் என இவர் கூறுவது சின்னப்பிள்ளைத் தனமாக அல்லவா உள்ளது? B.SC.படித்தவருக்கு அடிப்படை ‘ஞானம் “ கூட இல்லை என அறிந்து வெட்கப்படுகிறோம். என்ன வெட்கக்கேடு?

Ö சபி பாய் செய்த தீமைகள், அநீதிகள், அநியாயங்கள் ஆகியவற்றை எழுதத்தான் போகிறோம்.அவற்றை எதிர்கொள்ள சபி பாய் தன் உடம்பைச் சரி செய்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.

Ö சபி பாய் தன்னை ‘துரோகி” என்றும் ஈரோடு ஜமாலை “PLAY BOY” என்றும் ஒப்புக்
கொண்டதற்கு மிக்க நன்றி.

Ö ‘என்னைத் திருத்த வேண்டியதுதானே உங்க வாப்பா நாயகம்?” எனக் கேட்கிறார் சபி பாய்.
திருந்தவே மாட்டேன் என்பவனை - எப்படித் திருத்த முடியும்? கருவாடு மீனாக ஆசைப்படலாமா,சபி பாய்?

Ö குருவின் துஆவினால் செல்வத்தைப் பெற்றவர்கள், அன்னவர்களுக்காக சொத்துக்களை
மட்டுமல்ல, உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். அதைத்தான் தரீகாக்களில் ஜிஹாத் எனச் சொல்லப்படும். சபி பாய்க்கு இதுவும் தெரியாதா?

Ö நாங்கள் கூறுவதை ஃபித்னா என்று சபி பாய் கூறுகிறாரே, எங்களை வம்புக்கு இழுத்து
இல்லாததையும், பொல்லாததையும் எழுதத் தொடங்கியது அவர் தான் என்பதனை மறந்து விட்டீரா? அவருக்கு செலக்டிவ் அம்னீஷியாவா?

Ö நாங்கள் வறுமையில் பெருமை காண்பவர்கள். ஆனால், சபி பாய் தம்மிடம் இருக்கும் அற்பப் பணத்தை வைத்துக் கொண்டு பெருமை பேசுகிறார். ஆணவத்தோடு பேசுகிறார். அவர் பணம் - அவர் ஆணவம் - அவரையே கொன்று விடும் என்பதை மறந்து விட்டாரா?
Ö கம்பம் - பூகம்பமானதா? என சபி பாய் கொக்கரிக்கின்றாரே? அவர் B.SC. படித்தவர் தானே?
தமிழ் அகராதி என ஒன்று உள்ளது. அதாவது அவருக்குத் தெரியுமா? இனிமேலாவது அதனை
எடுத்துப் பார்த்து கம்பம் என்றால் என்ன பொருள் என்று கூறுவாரா?

Ö நாங்கள் யாரையும் எதையும் இணை வைக்கவில்லை. சபி பாய் தான் இணையில்
சிக்கியுள்ளார். அதிலிருந்து அவர் வெளியேறட்டும்.
M.Y. நிஜாமுத்தீன் அவர்கள் தான் உனக்கு வியாபாரம் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை
ஷபியுல்லாவுக்குச் சாட்டையடி...ஒப்புக்கொள்ளும் சபி பாயே... நீ M.Y. நிஜாமுத்தீன் அவர்கள் பார்ட்டிகள் உன்னை அழைத்துச் சென்று மண்டி ஆரம்பித்ததாகச் சொல்வதிலிருந்தே, நீ M.Y. நிஜாமுத்தீன் அவர்களுக்கு நன்றி கெட்டவனாக
ஆகி விட்டாய் என்பது தெள்ளத்தெளிவாகிறது. இப்படிப்பட்ட நீ எங்கள் ஷைகு நாயகத்தைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவன். உனது வாசகத்தைப் போய்; கலீபா. ஹபீபுல்லா அவர்களிடம் கேட்டதற்கு, அவர் M.Y. நிஜாமுத்தீன் அவர்களுடன் வியாபாரத்தில் சேர்ந்து இருந்ததாகவும்,உன்னைப்போல் நன்றிகெட்ட தனமாக ஓடிவிடவில்லையென்றும் சொன்னார்கள்.
A.P.S.சலாகுத்தீன் குடும்பம், DR. A.P. அப்துல் ஹக் குடும்ப விவாகரத்து விஷயமாக
ஒருதலைபட்சமாக நடந்ததாகக் குறிப்பிடுகிறாய். கலீபா. ஹபீபுல்லா அவர்களும், காஜா நஜ்முத்தீன் ஆகிய இருவரும் A.P.S.சலாகுத்தீன் வீட்டிற்குச் சென்று விஷயங்களைச் சொல்லியவுடன் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் (A.P.S. சலாகுத்தீன், அவர் மனைவி, அவர் மகன் அணீஸ், சலாகுத்தீன் மைத்துனர் V.A.B.M. மாலிக்) ஆகியோர் அனைவரின் ஒப்புதல் பெற்று, அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் Advocate மூலமாக விவாகரத்து நடந்ததை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்.
சங்கைமிகு ஹாமித் மௌலானா அவர்களுக்கு பெண் பிள்ளைகள் கிடையாது. அவ்வாறிருக்க,
சங்கைமிகு ஹாமித் மௌலானா மகளார் கல்யாணத்துக்குப் பணம் கொடுத்ததாக நீ
சொல்லியதிலிருந்து நீ ஒரு பெரும் பொய்யன். எதை வேண்டுமானாலும் உன் இஷ்டத்திற்கு பேசக் கூடியவன் என்று தெரிகிறது. எனவே, நீ சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள்,அனைத்துமே பொய்யானவைதாம் என்று இதனை வாசிக்கும் அனைவரும் அறிவர்.
மேலும், எங்கள் குருவைப் பற்றி எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க,
கொடுமையான முறையில் நீ உருவகப்படுத்தி எழுதியதைப் பார்க்க, உன் புத்தி எவ்வளவு மோசமானது என்று தெள்ளத் தெளிவாக பிரதிபலிப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
எங்கள் குருநாதர் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களே நல்லவர்கள், நாங்கள் அறிவோம். குருவை அளப்பதற்கு யாருக்கும், குறிப்பாக உனக்கு எந்தத் தகுதியும், அருகதையும் இல்லை என்பதைப் புரிந்துகொள்.

கடைசியாக ஒரு வார்த்தை:
இஸ்லாமிய விரோத காரியங்களில் ஈடுபட்டதால், ஷரீஅத்தின் நியதிப்படி, எங்கள் தரீக்காவிலிருந்து நீக்கப்பட்ட சபி பாய்க்கு, எங்கள் தரீக்காவைப் பற்றியோ, எங்கள் குரு சம்பந்தமாகவோ எழுதவோ,பேசவோ, விமர்சிக்கவோ எந்த உரிமையும், தகுதியும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேலும், எழுதினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன். மேலும்,
எங்கள் குருவை உயிரினும் மேலாக எண்ணக்கூடிய - உயிரையும் கொடுக்கக்கூடிய ஆயிரமாயிரம் உண்மையான பக்தர்களும் உன்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை எங்களால் தடுக்க முடியாது.

இப்படிக்கு,
உன் அருகில் இருந்து ‘செயல்படும்”
- A.ஷேக் முஹம்மது.

Tuesday, December 8, 2009

யார் இவர்கள்

அன்பிற்கினிய சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்
பெருமானார் ரசூலே கரீம் ஸல் அலை அவர்களின் திருகுடும்பத்தினரைப்பற்றி அவதூராக எழுதிக் கொண்டிருக்கும் துபாயில் இயங்கிக் கொண்டிருக்கும் தொஸிபா நிறுவனத்தார்கள் குறிப்பாக இக்பால் அபுபக்கர் இவர்களின் தலைமையில் கோட்டாறு சாதிக் மற்றும் திருச்சி ரப்பானியின் புதல்வர் மற்றும் இக்பாலின் அபிமானிகள்.
இந்தியாவில் ஜமால் ஷபியுல்லா இவர்களை சபையிலிருந்து நீக்கி பல வருடங்கள்கடந்து விட்ட நிலையில் இப்போது இவர்கள் மவுலானாவைப்பற்றி அவதூறாக பேசுவதின் காரணம் என்ன என்பதை விசாரித்த வகையில் துபாயிலிருந்து தொஸிபா கம்பெனி நிறுவாகியான இக்பால் அபுபக்கர் தங்களுக்கு தொலைபேசி செய்து அவதூறுகளை பரப்புவதற்கு பல ஆயிரமங்கள்; கொடுத்ததாகவும் அதனால்தான் நாங்கள் இப்படி நடக்கின்றோம் என்ற உண்மையை கூறி உள்ளார்கள்.
பணத்தினால் அஹ்லேபைத்தினரின் குடும்பத்தை அசிங்கப்படுத்தி எழுதக் கூடாத வார்த்தைகளை எழுதி தங்களின் ஈனத்தனமான எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
நேர்மைமிக்க சகோதரர்களே கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்.
இந்த சபையில் தலைவராக இருந்து எப்படி எல்லாம் மவுலானாவை புகழ்ந்தாரோ அதே நாவு இன்று எப்படி எல்லாம் பேசுகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்.?
இக்பால் அபுபக்கர் செய்த தவறுகளை எல்லோர் மத்தியிலும் வைத்து பகிரங்க படுத்தியதால் அந்த தவறுகளை திருத்திக் கொள்வதை விட்டு விட்டு அவுதுறு பேசிக் கொண்டு எழுதிக் கொண்டு வருகிறார்கள்.
பணவசூலுக்காக மவுலானா வருகைதருகிறார்கள் என்று எழுதக் கூடிய நீங்கள் ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள். பணம் நோக்கமாக இருந்திருந்தால் உங்கள் தவறுகளை எல்லோர் மத்தியிலும் சுட்டிக் காட்டி இருக்க மாட்டார்கள். உங்களிடமிருந்து கோடி கோடியாக வருகிறது என்றால் உங்களை யாரும் பகைத்துக் கொள்ள முடியுமா?
படித்தவன் படிக்காதவன் ஏழை பணக்காரன் தலைவன் தொண்டன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் ஒரே மாதிரியான அன்பை மவுலானா வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்.
உங்களின் சுயகௌரவத்திற்காக வேண்டி இன்று அவதூறு எழுதி வருகிறார்கள்.
ஈடியே நிறுவனத்திலிருந்து இக்பால் மாறினாரே இந்த நிறுவனத்திற்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்திருக்கிறார் என்பது அவர் மனசாட்சிக்கு தெரியும்.
ஆதை விரைவில் சலாவுதீன் காக்கா அவர்களுக்கு அனுப்பி வைக்க உள்ளேன். அவர்கள் அனுமதி தந்தால் இந்த பிளாக்கில் வெளியிடுவேன்.
இன்னும் தற்போது இயங்கி வரும் டொஸிபா நிறுவனத்தை அபுதாபி ஸ்பான்ஸரிடமிருந்து அபகரிக்க நடந்துக் கொண்டிருக்கும் சதி லீலைகளைப் பற்றிய செய்திகளையும் வெளியிடுவேன்.
ஆநியாயமாக உழைப்பைக் கொடுத்து வேலைப்பார்த்து வந்த சகோதரர்களை சபைக்கு செல்கிறார்கள் என்றக் காரணத்திற்காக வேலையிலிருந்து நீக்கி அவர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.

உங்கள் சகோதரன்
வழுத்தூரான்

Monday, December 7, 2009

முஸ்லீம் முரசில் மறுப்பு கடிதம்

அன்பிற்குரிய சகோதரர்களே…

கடந்த நவம்பர் மாத “முஸ்லிம் முரசு” இதழில், ஈரோட்டைச் சேர்ந்த கு.ஜமால் முஹம்மத் என்பவர், சங்கைக்குரிய மவ்லானா அவர்களைப் பற்றித் தவறான செய்தியை எழுதி வெளியிடச் செய்தார். அதன் பின், தரீக்காவின் கலீஃபாக்கள் சிலர், அப்பத்திரிகையின் அலுவலகத்திற்குச் சென்று, உண்மை நிலைமையை எடுத்துக் கூறி, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், தலைமை கலீஃபா ஹபீபுல்லாஹ் அவர்களின் கடிதத்தை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, உண்மையை உணர்ந்து கொண்ட ஆசிரியர், டிசம்பர் மாத இதழில், அக்கடிதத்தை வெளியிட்டார்.

அவ்விரு கடிதங்களையும் இங்கு தங்களின் பார்வைக்காக வைத்துள்ளோம்…

இனியாவது, ஜமால், சபியுல்லா மற்றும் இம்தியாஸ் போன்றவர்கள், உண்மையைப் பேச முயற்சிப்பார்கள் என நம்புகிறோம்….

வஸ்ஸலாம்.

Thursday, December 3, 2009

காயல் ரசிகன்

காயல்பட்டினம் அபூபக்கர் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…….)

தங்களின் கடிதம் பார்த்தேன்; ரசித்தேன்; ஒன்றே ஒன்றைத் தவிர, மற்ற அனைத்தும் பொய்யாகவும் திரித்துக் கூறப்பட்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

தாங்கள் தற்சமயம் சபை நிகழ்சிகளில் இருந்து விலகிக் கொண்டதாகக் கூறியது மட்டும் உண்மையான மற்றும் மகிழ்ச்சியான செய்தி….

மற்றவற்றிற்கு என்னுடைய பதில் இதோ:

* தாங்கள் முதலில் இஸ்லாமியராக இருப்பதற்கு முன், நல்ல மனிதராக இருக்க வேண்டும். எந்த மதத்தினரையும் நோவினை செய்யாதவராகவும், ஒரு மதத்தைப் பற்றி யாரேனும் தவறாகப் பேசும் பட்சத்தில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பவராகவும் இருக்க வேண்டும்… தாங்கள் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே…?
* தங்களுக்குத் தெரியாமலேயே, தங்களையே நிறுவனத்திலிருந்து துரத்துவதற்கான முயற்சிகளெல்லாம் நடைபெற்றவை அதிகமாகத் தங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
* யார் யாரெல்லாம் கம்பெனிக்கு எதிராகச் செயல்பட்டார்கள், யார் யாரையெல்லாம் என்னென்ன காரணத்திற்காக கம்பெனியிலிருந்து நீக்கினீர்கள் என்பதனை அனைவரும் அறிவர்…
* ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது சம்பந்தமாக பிரச்சனைக்குள்ளான ஒருவரை, 100 க்கும் மேற்பட்ட முறை அவர் மீது புகார்கள் வந்தும், மிகப் பல முறை அடி தடியில் ஈடுபட்ட அவரை, கிட்டத்தட்ட 3 வருடங்கள் எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றியதன் பின்னணி என்ன?
* வேலைக்கு ஆள் எடுக்கச் சென்ற ஒருவர், விசாவிற்காக பணம் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக வெளிப்படையாகப் புகார் கூறப்பட்டும், அதனை தங்களுக்கு நெருங்கியவர்களே அனைவரிடமும் கூறிய போதும், அவர் இன்றளவும் அதே நிறுவனத்தில் நிலைப்பதன் அர்த்தம் என்ன?
* அதே நிறுவனத்தில் அதே பதவியில் அதே ஊழியர்களுடன் பணியாற்றிய தாங்கள், ஒவ்வொருவரின் நடவடிக்கையையும் மிக நன்றாகவே அறிந்திருந்த தாங்கள், 4 வருட காலமாக அமைதியாக இருந்துவிட்டு, இப்பொழுது கூக்குரலிடுவதன் மர்மம் என்ன?
* மிக அதிகமான் தகுதிகள் இருந்தும் மிக நன்றாகவே படித்திருந்தும், கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கும் ஒரு சில பணிகள், ஹெல்ப்பராக 3 மாதங்கள் மட்டுமே வேலை பார்த்தவுடன், 5 வருடமாகியும் இன்றளவும் அதனைப் பற்றிய முழு அனுபவமில்லாதவருக்கு, மிக எளிதாகக் கிடைப்பது எவ்வாறு?



* “ சபைக்குச் சென்றால் தங்களைப் போல் என்னையும் டெர்மினேட் செய்து விடுவார்கள்” என எமது சகோதரரிடம் வழுத்தூரைச் சேர்ந்த ஒரு ஊழியர் கூறியிருக்கிறார். இதுதான் தாங்கள் கம்பெனி நடத்துவதன் வழிமுறையா? எப்படி சார், எதுவுமே தெரியாததுபோல் நடிகின்றீர்…!



* எமது சகோதரரை, விடுமுறை நாளான வெள்ளிகிழமை அன்று இரவு 11 மணிக்கு போன் போட்டு, மறுநாள் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்து, சட்டத்திற்கு எதிராக, கடிதம் ஏதும் அளிக்காமல், எந்த முன்னறிவிப்பும் செய்யாமல், ஒரு மாத நோட்டிஸ் கூட கொடுக்காமல், டெர்மினேட் செய்தது ஏனோ?



* அவ்வளவு அவசர அவசரமாக டெர்மினாட் செய்யுமளவுக்கு, அவர் என்ன கிரிமினல் குற்றமா செய்தார்? முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றித் தவறாக ஒருவன் பேசிய பொழுது, தங்களுக்கு வராத கோபம், தங்களைப் தவறைச் சுட்டிக் காட்டிப் பேசிய பொழுது மட்டும் வந்தது ஏனோ?




….. தொடரும்……